எதிர்பாராத நேரத்தில் வெடிக்கப்போகும் போர் : அச்சமூட்டும் எதிரணி எம்.பி
போர் முடிந்துவிட்டது என்று நாம் கூற முடியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் போர் வெடிக்கலாம். அதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (SJP) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
முக்கியமான நிலங்கள் இராணுவம் வசம் இருக்கவேண்டும்
தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான நிலங்களை இராணுவத்தின் கைகளில் வைத்திருப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் "நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி அரசாங்கம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த அரசாங்கம் ஆழமற்ற நீரில் தத்தளிப்பது போல் நாட்டின் பாதுகாப்பில் செயல்படுகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
எதிர்பார்க்காத நேரத்தில் போர் வெடிக்கலாம்
நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்துவிட்டது என்று நாம் கூற முடியாது. நாம் எதிர்பார்க்காத நேரத்தில் போர் வெடிக்கலாம். அதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.

கொழும்பைப் போலவே வடக்கு மற்றும் கிழக்கிலும் தேசிய பாதுகாப்பை எவ்வாறு கையாள்கிறோம் என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டும்.
வடக்கில் ஒரு கடுமையான நிலப் பிரச்சினை உள்ளது. இந்த நிலங்கள் தொடர்பான முடிவுகள் தனிப்பட்ட பாதுகாப்பை விட தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் உள்ள நிலங்களை நில உரிமையாளர்களிடம் திருப்பித் தர வேண்டுமா அல்லது அந்த நிலங்களுக்குப் பதிலாக மாற்று நிலங்கள் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இல்லையெனில், நிலங்களுக்குப் பதிலாக இழப்பீடு வழங்க முடியும்," என்று எம்.பி. கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 1 மணி நேரம் முன்