தொடர்ச்சியாக அதிகரித்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
களனி கங்கை அணையில் பல கசிவுகள் ஏற்பட்டுள்ளதாக இன்று (01.12.2025) காலை தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த கசிவுகளை மணல் மூட்டைகளால் நிரப்பி சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் களனி கங்கை நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
அணையைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு களனி காவல்துறையினர் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
களனி கங்கை அணையில் கசிவுகள் தொடர்பில் பிரதேசவாசிகள் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, களனி காவல்துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் வந்து குறித்த இடங்களை ஆய்வு செய்து, மணல் மூட்டைகளால் முறையாக நிரப்பி, அவற்றை சரி செய்து வருகின்றனர்.
நேற்று (30.11.2025) இரவு 11.30 மணியளவில், களனி ஆற்றின் நீர்மட்டம் களனி அணையின் மேல் மட்டத்திலிருந்து இரண்டு அடி கீழே இருப்பதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |