ரணில் பதவியேற்க முன்னர் எங்கு சென்றார் ? வெளியானது தகவல்
parliament
ranil
muththedduwe thero
By Jaso
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் எங்கு சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராமய விகாரைக்குச் சென்று அந்த விகாரையின் பிரதம தேரர் முத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.
சாதாரணமாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மற்றும் ஏனைய பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சம்பிரதாயமாக அவர் கொழும்பு கங்காராமய மற்றும் கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரைகளுக்கே சென்று வருவது வழக்கம்.
இருந்த போதிலும் இம்முறை தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு அமர்த்த பெரிதும் பாடுபட்ட கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றிருக்கின்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி