நாளாந்த வாழ்க்கையை பாதிக்கும் ஒரு பொது நோய்
மூலநோய் என்பது உலகளவில் அதிகமானவர்களைப் பாதித்து வரும் ஒரு சுகாதாரப் பிரச்சினையாகும்.
தவறான உணவுப் பழக்கங்கள், நீர்ச்சத்து குறைவு, உடல் இயக்கம் குறைதல், நீண்ட நேரம் அமர்ந்து செய்வது போன்ற வேலைகள், மலச்சிக்கல், கர்ப்ப கால மாற்றங்கள் போன்றவை இந்த நோயை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
ஆரம்ப நிலைகளில் சாதாரண அசௌகரியமாகத் தோன்றினாலும், சரியான பராமரிப்பு மற்றும் சிகிச்சை இன்றி விட்டால் கடுமையான வலி, தொடர்ச்சியான இரத்தப்போக்கு, வீக்கம், அழற்சி மற்றும் தினந்தோறும் வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும்.
சித்த மருத்துவத்தில் மூலநோய்க்கான பார்வை சித்தக் கோட்பாடுகளின்படி, மூலநோய் என்பது மூன்று தாதுக்களின் (வாதம்–பித்தம்–கபம்) சமநிலையின்மை காரணமாக உருவாகிறது.
எனவே சிகிச்சை வெறும் அறிகுறி நிவாரணத்தை மட்டுமே நோக்கி செல்கின்றது அல்ல.
உடலின் உள்ளுறை சமநிலையையும் சீராக்கும் நோக்கத்துடன் வழங்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் நடைபெறும் மூலநோய் சிகிச்சை முறைகள்
1. உள்ளக சிகிச்சை மற்றும் உடல் சுத்திகரிப்பு சித்த மருந்துகள் குடலின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை நிவர்த்தி செய்து, மூலநோய் ஏற்படும் மூல காரணிகளைப் பழுது பார்க்க உதவுகின்றன.
2. வெளிப்புற சிகிச்சைகள் சிறப்பு எண்ணெய் தடவல் Sitz bath (வெந்நீரில் அமர்ந்து மருத்துவக் குளியல்) வெளி நீக்கம் போன்ற முறைகள் உள்ளன இவை வலி, வீக்கம், இரத்தப்போக்கு போன்றவற்றை விரைவில் குறைக்க உதவுகின்றன.
3. வாழ்க்கை முறை மாற்றங்கள் நார்ச்சத்து நிறைந்த உணவு (கீரை, காய்கறி, பழங்கள்) போதுமான நீரருந்துதல் மலத்தை தடுக்காமல் உடனடியாக கழித்தல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதைத் தவிர்த்தல் யோகாசனம் மற்றும் நடைப்பயிற்சி செய்தல் இவை நோயைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கியமானவை.
பெரும்பாலானவர்கள் வெட்கம், தவறான எண்ணம் அல்லது விழிப்புணர்வு குறைவு காரணமாக ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள்.
இதனால் நிலையில் மோசமடைந்து, சிக்கலான சிகிச்சை தேவையான நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |