உலகின் பெறுமதிமிக்க மரகதம்...!
உலகில் மிகவும் பெறுமதிமிக்க பொருள் வைரம் (Diamonds) என உலக வாழ் மக்கள் அனைவரும் நம்புகின்றனர்.
எனினும், இது உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், மரகதக்கற்கள் (Emeralds) வைரத்தை விட பெறுமதிமிக்கவை என்பது பலரும் அறியாத உண்மை.
இதன்படி, மரகதக்கற்களின் பெறுமதி வைரத்தை விட 20 மடக்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரகதக்கல்
மரகதக்கல் ஆங்கிலத்தில் எமரெல்ட் என அழைக்கப்படுகிறது. ஒளி புகக்கூடிய அருகம் புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது.
வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும் இந்த மரகதக்கற்கள், பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளால் ஆனது.
அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு கரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும். இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் அதிக கவனம் தேவை.
தரமான மரகதம் கிடைக்கும் நாடு
இந்த நிலையில், முதல் தரமான மரகதம் கொலம்பியா (Colombia) நாட்டில் கிடைக்கின்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது.
பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களில் மரகதக்கற்கள் கிடைத்தாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை. பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும்.
மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் மாறுகின்றது.
உலகின் மிகப்பெரிய மரகதக்கல்
கொலம்பியாவில்1967 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கச்சாலா மரகதம் (Gachala emerald) 858 காரட் எடை கொண்டது. இது உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரகதம், கடந்த 2001 ஆம் ஆண்டு ஏலத்தில் 2.2 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டது.
மரகதம் அணிவதன் பயன்கள்
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும்.
கல்வியலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும். மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |