இலட்சக்கணக்கில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் - முதலிடம் பிடித்தது இந்தியா
இந்த வருடத்தில், இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
நேற்று முன்தினம் (20) வரை ஏழு இலட்சத்து பதினான்காயிரத்து ஐநூற்று தொண்ணூற்று எட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலா பயணிகள்
இந்த மாதத்தில் கடந்த 20 நாட்களில் மட்டும் ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள், பதினையாயிரத்து முந்நூற்று முப்பது பேர் வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
பத்தாயிரத்து நூற்று எண்பத்து நான்கு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து ஐயாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று பேரும், ஜேர்மனியிலிருந்து ஐயாயிரத்து நூற்று நாற்பத்தி ஒருவரும் வந்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு முழுவதும்
இதேவேளை, 2022ஆம் ஆண்டு முழுவதும் ஏழு இலட்சத்து ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி எட்டு சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்