தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இருவர் கைது : நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Theepan May 31, 2026 08:42 AM GMT
Report

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்  தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அத்துடன் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனையும் விதித்துள்ளது.

வெசாக் தினத்தினை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் நேற்றைய தினம் (30) வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில் காணி உரிமையாளர்கள் போராட்டம் முன்னெடுத்தனர்.

அரச நிறுவனங்களில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை

அரச நிறுவனங்களில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை

மல்லாகம் நீதிமன்றில் முன்னிலை 

இந்தநிலையில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்குச் செல்வதாக கூறி விகாரைப் பகுதிக்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இருவர் கைது : நீதிமன்றின் உத்தரவு | Youths Arrested For Take Photo In Thaiyiddi Vihara

அதனை அவதானித்த காவல்துறையினர் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, இருவரையும் கைது செய்து பலாலி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளுக்கு பின்னர் நேற்றிரவு இருவரையும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் காவல்துறையினர் முற்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த இருவரையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று, பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி காவல் நிலையத்தில் கையெழுத்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி மகிந்தன் கந்தசாமி நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்

எரிபொருள் விலை அதிகரிப்பு : முச்சக்கர வண்டி கட்டணம் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025