பதவி விலக தயார்: ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
World
By Shalini Balachandran
பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் அவர் பதவி விலக தயாரா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் தெரிவித்துள்ளார்.
பதவி விலகல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிந்தால் தேர்தலுக்கு செல்லமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
காரணம், என் நோக்கம் தேர்தல் அல்ல போரை முடிப்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால அமைதியை அடைவதற்குத் தேவையான முக்கியமான முடிவுகளை எடுக்க மக்கள், புதிய ஆணையைக் கொண்ட ஒரு தலைவரை விரும்பக்கூடும் என்பதை தான் புரிந்துகொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

