வேகமெடுக்கும் ரஷ்ய தாக்குதல்கள் :உக்ரைன் அதிபர் எடுத்துள்ள முடிவு
கடந்த சில நாட்களாக உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்கீவ் பிராந்தியத்தை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(volodymyr zelenskyy) தனது வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு
ஜெலன்ஸ்கி இந்த வாரம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருந்ததாகவும், ஆனால் அவர் தனது பயணத்தை காலவரையின்றி தள்ளிவைத்துள்ளதாகவும் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கருங்கடல் மற்றும் கிரிமியா தீப கற்ப பகுதிகளை குறிவைத்து உக்ரைன் வீசிய 10-க்கும் மேற்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் தற்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |