முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் மூவர் கைது(படங்கள்)
முல்லைத்தீவில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்ததில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றி வளைப்பு நடவடிக்கை இன்று(24) அதிகாலை 4:30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து காவல் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
புனர்வாழ்வு நிலையம்
இதன் போதுபோதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் காவல்துறையினரால் விசேடமான சுற்றி வளைப்புகள் பல நடாத்தப்பட்டு பல்வேறு கைது சம்பவங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மீட்கப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்றுவருகிறது.
இந்த வகையிலே சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலே காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக போதைப்பொருள் தொடர்பான சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்று இன்று அதிகாலை 4:30 மணியளவில் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மூவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு, தீத்தக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற வாடிகளில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று இன்று(24) காலை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கையின் போது போதை பொருட் பாவனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சுற்றி வளைப்பு
ஆறு நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலி ஓயா, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல், கொக்குளாய் ஆகிய காவல் பிரிவுகளில் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு விசேடமாக சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது போது 3 கிராம் ஹெரோயின் 480 கிராம் ஐஸ், ஒரு கிலோ 855 கிராம் 39 மில்லிக்கிராம் கேரள கஞ்சா கஞ்சா செடி 5 மற்றும் 48 கிராம் வேறு வகையான போதை பொருட்கள் 443 லீற்றர் கசிப்பு 1797 லீற்றர் கோடா உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதே வேளை இரண்டு பெண்களும் 111ஆண்களுமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 25 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் நிலைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |