நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடி கைது
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் (Bangladesh) பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சீதுவை பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (Department of Immigration & Emigration) சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரஜைகள்
கைது செய்யப்பட்டவர்கள், 19 முதல் 54 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் அவர்களை விரைவில் பங்களாதேஷுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
