ஒரு பிள்ளையின் தாய் வெட்டி படுகொலை!
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
By Jaso
காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் கடந்த ஆறு வருடங்களாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்தவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா விசாரணைகளை மேற்கொண்டார்.இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி