அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கடப்பாடும் பொறுப்பும் அமெரிக்காவிற்கே உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் (Mohammad Ishaq Dar) உடன் தொலைபேசி வாயிலாக நடத்திய உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இதன்போது அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஏற்படும் எந்தவொரு விதிமீறல்களுக்கும் அமெரிக்காவே நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும் என்பதைத் திட்டவட்டமாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு அத்தகைய மீறல்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் இந்த உரையாடலின் போது அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |