யாழ்பாணத்திற்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் செல்லும் ஆதிவாசிகள்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நாளை (21) பயணம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.
மேலும், ஆதிவாசிகளின் தலைவர் நாளை(21) மற்றும் நாளை மறுநாள் (22) என இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல் பயணம்
அத்தோடு, அவர் யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்