சீனாவில் இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா
COVID-19
Sri Lanka
China
By Sumithiran
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸ் தான் தற்போது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
மயானங்களிலும் நெருக்கடி

இவ்வாறு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்த அதேவேளை உயிரிழப்புகளும் பெருகிவருகிறது.இதனால் அங்குள்ள மயானங்களிலும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தூதுவர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி