அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது!
அம்பலாங்கொடை பொது நூலகத்திற்கு முன்பாக கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, குறித்த மூன்று சந்தேகநபர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை பொது நூலகத்திற்கு முன்பாக கடந்த 4 ஆம் திகதி காலை 10.21 க்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிதாரிகள்
இவ்வாறு உயிரிழந்த நபர் அம்பலாங்கொடை, போரம்ப பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவப்பு நிற கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்தக் கொலையைச் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, பெண் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரிகளுக்கு காரை வழங்கிய நபர் கொழும்பிலும், குறித்த மீன் வியாபாரியை நோட்டமிட்ட சந்கேநபர் கொஸ்கொடை பிரதேசத்திலும் மற்றைய சந்தேகநபர் வதுகெதர பிரதேசத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |