சர்வதேசமே எங்களை கண்கொண்டு பார்- அனைத்துலகமே எமது போராட்டத்திற்கு தோள் கொடு!

protest eastern province amparai missing persons
By Kalaimathy Aug 03, 2021 06:15 AM GMT
Report

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி த.செல்வராணி தலைமையில் திருக்கோவில் குடிநிலம் செல்வ விநாயகர் முன்றலில் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, தாயின் கண்ணீர்ப் பயணத்திற்கு முடிவு கொடு, பத்து மாதம் சுமந்த வயிறு பற்றி எரிகின்றதே எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், என் விழிகள் மூடமுன் என் பிள்ளைகளைக் காண வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் மன வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது தேடலுக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் இன்னும் வரவில்லை. எனவே எங்கள் வேதனைகளை சர்வதேச நாடுகள் கண்கொண்டு பார்த்து எங்களின் பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

எங்களால் போராட முடியாத நிலைமையிலும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் இறக்கும் தருவாயிலும் எமது பிள்ளைகளைத் தேடும் போராட்டம் தொடரும். எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்ட்டு பதினொரு வருடங்களாகின்றன. ஆனால் இதுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இனிவரும் சமூதாயத்திற்கு இவ்வாறான நிலைமை வந்துவிடக் கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் சங்ககத்தின் தலைவி திருமதி த.செல்வராணி கருத்துத் தெரிவிக்கையில்,

எமது போராட்டம் பத்து வருடத்தைக் கடந்து பதினொராவது வருடத்தை எட்டி நிற்கும் இத்தருவாயில் எட்டு மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை இழந்து நிற்கின்றோம். எமது உறவுகளுக்கு என்ன நடந்திருக்கின்றது என்ற உண்மையையே நாங்கள் உலக நாடுகளிடம் கேட்டு நிற்கின்றோம்.

எமது பிள்ளைகள் அனைவரும் வலுக்கட்டாயமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்கள், வாகனங்களில் இறக்கி எடுக்கப்பட்டவர்கள், வீடு வீடாய் சுற்றி வளைப்பில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். இவர்கள் எங்களுக்கு மீள வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை எங்களுக்குத் தெரிய வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு எங்கள் பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் எங்கள் வேதனைகளைக் கண்கொண்டு பாருங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நீதி வேண்டி நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அனைத்துலக நாடுகளும் எங்களுடன் சேருங்கள். நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும் எங்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து எங்கள் உறவுகளுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என்று தெரிவித்தனர்.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026