வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை : குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை

Jaffna Fishing Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Sathangani Feb 29, 2024 05:47 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி கடற்றொழிலாளர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ் கடற்றொழிலாளர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் - மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பதாக யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முற்றாக முடங்கியது யாழ் பேருந்து சேவை

முற்றாக முடங்கியது யாழ் பேருந்து சேவை

சரவணபவன் எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிக்கின்றார். 

 “என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் நீங்கள் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா? உங்கள் அதிகாரத் திமிர்த்தனங்களை எங்கள் மக்கள் எப்போதும் அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என் நினைக்காதீர்கள்.” என யாழ் மாவட்ட முன்னாள் எம்.பி கடற்படையை எச்சரித்துள்ளார்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை : குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை | Ban On Northern Fishermen S Fishing Activities

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கும் யாழ் மாவட்ட ஊடவியலாளர்கள், பின்னர் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலையீட்டுன் அந்தத் தடை நீக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி, விகாரையின் பின்புறத்தோடு இணைந்த கடல் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சுமந்திரனின் தாயாருக்கு சிறீதரன் அஞ்சலி

சுமந்திரனின் தாயாருக்கு சிறீதரன் அஞ்சலி

கடற்படைக்கு அதிகாரம் இல்லை 

குறித்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை அபகரித்து விடுதிகளை அமைத்துள்ள கடற்படை, கடலையும் ஆக்கிரமித்து விடுதிகளை அமைக்கப்போகிறதா என முன்னாள் எம்.பி சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“விகாரைக்கு அண்மையாக, எங்கள் மக்களின் காணிகளை அத்துமீறி பிடித்த கடற்படையினர் விடுதியை அமைத்து சிங்களவர்களைத் தங்க வைக்கின்றனர். இப்போது எங்கள் கடலையும் கையகப்படுத்தி அதிலும் விடுதி அமைக்கப்போகின்றார்களா என்ற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கின்றது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை : குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை | Ban On Northern Fishermen S Fishing Activities

தேசிய பாதுகாப்புக் கருதி, சட்டத்திற்கு உட்பட சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், எனினும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மாதகல் சம்பில்துறை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழீழ அரசாங்கம்

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழீழ அரசாங்கம்

இடையூறு ஏற்படுத்தவில்லை

“கடற்படை தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பேச முடியும், மதம் சார்ந்து பேசுவதற்கு எந்த அனுமதியும் இல்லை, தங்களுடைய தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான அவர்களுடைய கருத்துக்களைச் சொல்லலாமே தவிர, அதுவும் சட்ட ரீதியாக, அவர்களுடன் அணுகுகின்ற தரப்பின் ஊடாகத்தான் இதனை தெரிவிக்க முடியுமே தவிர, நேரடியாக அந்த கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தெரிவிக்கமுடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை : குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை | Ban On Northern Fishermen S Fishing Activities

எவ்வாறெனினும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு கடற்படை ஒரு போதும் இடையூறு ஏற்படுத்துவதில்லை என, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் - மாதகல் பிரதேசத்தில் இறால் பிடியில் ஈடுபட்ட சிலருக்கு முறையான அனுமதிப்பத்திரம் காணப்படவில்லை எனவும், ஆகவே அவர்களின் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தடம்புரண்டது பாடசாலை பேருந்து! 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தடம்புரண்டது பாடசாலை பேருந்து! 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024