சர்ச்சை ஏற்படுத்திய இன்றைய போட்டி - கடுமையாக பேசிய இந்திய நட்சத்திர வீரர்(காணொளி)
பங்காளதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியை தேவையின்றி பங்காளதேச பந்துவீச்சாளர் சீண்ட, பதிலுக்கு அவர் கோபம்நிறைந்த வார்த்தைகளை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளையும் - விராட் கோலியின் சண்டையையும் பிரிக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
அவரின் கோபமான செயல்பாடு, வார்த்தைகள், துடுப்பாட்டத்தில் பதிலடி கொடுப்பது போன்றவை பங்காளதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் நீடித்து வருகிறது.
நேரடியாக பிரச்சினை
இந்த தொடரில் ஏற்கனவே பங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் - சிராஜ் ஆகியோருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் விராட் கோலி உள்ளே நுழைந்து பதிலடி கொடுத்தார்.
அவரின் செயல்பாடு இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கே நேரடியாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
2வது இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 12 ஓட்டங்களுக்குள் வெளியேறியதால், விராட் கோலி களமிறங்கி நிதானமாக விளையாடினார். 22 பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுத்திருந்த அவர், மெஹிடி ஹாசன் மிராஸ் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
முகத்திற்கு நேராக சொல்
கோலி ஆட்டமிழந்தவுடன் பங்காளதேச பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம், அவர் குறித்து ஏதோ முரணான வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த விராட் கோலி, தைஜுல் இஸ்லாமிடம் நெருங்கி எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக சொல் பார்க்கலாம் என கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதனையடுத்து உள்ளே வந்த பங்காளதேச தலைவர் சகிப் உல் ஹாசன் மற்றும் நடுவர்கள் இணைந்து சமாதானப்படுத்தினர்.
சிறப்பான ஆட்டம்
களத்தை விட்டு செல்லும் வரையில் விராட் கோலியின் கோபம் தணியவே இல்லை. நடுவர்களிடம் கத்திக்கொண்டே வெளியேறினார்.
இதனை பார்த்த ரசிகர்கள், டெஸ்ட் போட்டிகளில் 3 ஆண்டுகளாக மோசமான செயல்பாடுகளில் இருக்கிறார், ஆனால் சண்டை மட்டும் உடனுக்குடன் வந்துவிடுகிறது, கோபத்தை ஆட்டத்தில் காட்டுங்கள் என விமர்சித்து வருகின்றனர்.
2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தம் 4 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி 1, 19*, 24, 1 என சொற்ப ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்துள்ளார். இதனால் இந்திய அணி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
Virat Kohli got angry on the celebration of Bangladesh players.#INDvBAN #BANvIND #ViratKohli #INDvsBAN pic.twitter.com/8i93FquNgh
— Cricket Master (@Master__Cricket) December 25, 2022
டி20 மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் ஆட்டத்தை நிலைநாட்டியது போல டெஸ்ட் போட்டிகளிலும் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
