நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் சடலமாக மீட்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் பியதிஸ்ஸவின் சகோதரரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
ஹைபொரஸ்ட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிங்கந்தலாவ கிராமத்தின் வீடொன்றிலுள்ள கிணற்றிலிருந்து இவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிங்கந்தலாவை கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான ஓப்பநாயக்க டெனிசன் ஜயதேவ என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
விசேட நிகழ்வில் மது அருந்தியவர்
உயிரிழந்த நபர் நேற்று (18) மாலை தனது கிராமத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வுக்கு சென்று, அங்கு மது அருந்திய நிலையில் இரவு வீடு திரும்பியுள்ளார். எனினும் இன்று காலை (19) வரை அவர், வீட்டுக்கு வராத நிலையில், அவரை வீட்டார் தேடியபோதே வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள கினற்றில் சடலமாக கிடந்துள்ளார்.
விரைந்து சென்ற காவல்துறை
இது தொடர்பில் வீட்டார் ஹைபொரஸ்ட் காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வலப்பனை நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய, சடலத்தை மீட்டு மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
