மசகு எண்ணெய் பீப்பாய் விலையில் ஏற்பட்ட மாற்றம் - உலக சந்தை நிலவரம்!
Fuel Price In Sri Lanka
China
Crude Oil Prices Today
World Economic Crisis
By Pakirathan
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார மாற்றங்களின் சில தாக்கங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை மாற்றமடைந்துள்ளது.
அந்தவகையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.
மசகு எண்ணெய் விலை மாற்றம்
மசகு எண்ணெய் விலை மாற்றத்திற்கு காரணமாக, மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோரான சீனாவின் தேவை குறைவடைந்தமை, உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலைமை மற்றும் டொலர் வலுவடைதல் போன்ற விடயங்கள் கூறப்பட்டுள்ளது.
குறித்த விலைமாற்றத்தின் படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.81 டொலர்களால் குறைவடைந்து, அதன் புதிய விலை 82.10 டொலர்களாக காணப்படுகின்றது.
மேலும், வி.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 76.93 டொலர்களாக காணப்படுகிறது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்