ஆச்சரியத்தில் உலகம் : சீனாவிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
Government of China
China
By Sumithiran
உலகிலேயே அதிக விமானப் பயணிகளைக் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது என்று சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து பொது நிர்வாகம் இன்று (06) அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சீன எயார்லைன்ஸை பயன்படுத்த்திய பயணிகளின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டியது, இது உலகின் அதிக விமானப் பயணிகளின் எண்ணிக்கையாகும்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக கவனம்
2025 ஆம் ஆண்டில், சீன சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் அந்த நோக்கத்திற்காக 120 பில்லியன் சீன யுவான் மதிப்புள்ள நிலையான சொத்து முதலீடுகளைச் செய்துள்ளது.
மேலும், 2025ல் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், சீன சிவில் விமானப் போக்குவரத்துத் துறை 6.5 பில்லியன் சீன யுவான் லாபத்தை அடைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி