தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Coconut price
By Sathangani
வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority - CDA) தரவுகள் மூலம் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை138,582 ரூபாயாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேங்காய் ஏல விற்பனை
எனினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே, உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 180 முதல் 190 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 170 ரூபாயாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்