கொழும்பு சென்ற பேருந்து நிலை தடுமாறியது : பலர் படுகாயம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று,விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்தனர் .
இன்று (17) காலைவேளை இந்த விபத்து சம்பவித்ததாக ஆராச்சிகட்டுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரம், கடை, வீடு மீது மோதல்
ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த குழந்தை உட்பட21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆராச்சிகட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி