பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்!

London Srilankan Tamil News
By Kathirpriya Oct 16, 2023 11:58 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் 36ம் ஆண்டு நினைவேந்தலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்றைய தினம் (15) பிற்பகல் 3.00 மணியளவில் பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் மகளிர் அமைப்பினரால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

வளாகத்தில் மாவீரர் பொதுத் தூபி அமைந்துள்ள இடத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் திருமதி.சியாமளா, திருமதி.ஜெயந்தி, செல்வி.ரமணி, திருமதி.அருளினி , திருமதி.லதா ஆகியோர் பொதுச்சுடர்களை ஏற்றி வைத்தனர்.

காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்

காசாவில் 50000 கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் இன்றி அவலம்

தமிழீழ தேசிய கொடி

அதனைத் தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றும் நிகழ்வில், பிரித்தானியாவின் தேசிய கொடியினை திருமதி .ஜெசிந்தா அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசிய கொடியினை திருமதி.பூங்குயில் ஏற்றிவைத்தார்.

பின்னர் பொது மாவீரருக்கான திருவுருவபடத்திற்கு திருமதி.துக்சி ஈகைச் சுடரினை ஏற்ற, முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியுடைய திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.அபிராமி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பன்னிருவேங்கைகளின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திருமதி.நிலா ஏற்றிவைத்தார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day

அதன் பின்னர் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முதல் பெண் மாவீரர் மாலதியுடைய திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை திருமதி.சதானா  அணிவிக்க, பன்னிருவேங்களுக்கான மலர் மாலையினை திருமதி.கல்யாணி  அணிவித்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற, அக வணக்கத்தினைத் தொடர்ந்து மலர் வணக்கத்தினை திருமதி.தயாளினி ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

உலகில் பெண்கள் மட்டும் வாழ்கின்ற அதிசய கிராமம் எது தெரியுமா..!

உலகில் பெண்கள் மட்டும் வாழ்கின்ற அதிசய கிராமம் எது தெரியுமா..!

பெண் விடுதலை

இவற்றைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன,

அதன்படி, வரவேற்பு நடனத்தினை செல்வி.சர்வீகா வழங்கியிருந்தார், அதனைத் தொடர்ந்து பிரதான உரையினை திருமதி.பூங்குயில் தமிழிலும் நிகழ்வில் கலந்து கொண்ட இளைய தலைமுறைகள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் செல்வி.சௌமியாவும் வழங்கியிருந்தனர்.

மாவீரர் மாலதியின் நினைவுப் பாடலுக்கு இளையவர்களான செல்வி.பிரணவி செல்வி.அபினா ஆகியோர் நடனம் ஒன்றினையும் வழங்கியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து நினைவுக் கவிதையினை திருமதி.நிலா வழங்க, பாடல் ஒன்றினை செல்வி.சானுகா வழங்கியிருந்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது

பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது

எமது தேசத்தின் பெண் விடுதலை சார்ந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய, பெண்கள் எழுச்சி நாளுக்குரிய சிறப்புரையினை செல்வி.நிறையரசி சோதிதாஸ் வழங்கியிருந்தார்.

எழுச்சிப் பாடல்களை பாடகர்கள் திரு.மைக்கல் திரு.சுரேஸ் ஆகியோர் பாடி, நிகழ்வினை எழுச்சி ஊட்டியிருந்தமை சிறப்பான விடயமாகும்.

இறுதியில் திருமதி.சத்தியவாணி  நன்றி உரையுடன் உறுதி ஏற்பு நடைபெற்று, தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு, நிகழ்வுகள் சிறப்புற நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.  

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர் (காணொளி)

அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர் (காணொளி)

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Dayபிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நினைவேந்தல்! | Commemoration Of Tamil Eelam Women S Uprising Day


ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024