கிளிநொச்சியில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!
covid-patient-escape
By Vanan
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (26) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றின் கைதியே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார்.
தனக்கு கடும் நெஞ்சுவலி என்று அவர் தெரிவித்ததன் அடிப்படையில் நேற்றைய தினம் அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக வைத்திசாலை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை கிளிநொச்சிப் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்