இத்தாலியில் இருந்து வந்த பரிசுப்பொதி : சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஹோமாகம பகுதியில் வைத்து சுமார் 61 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹஷிஷ் ரக கஞ்சா அடங்கிய பொதியொன்று இலங்கை சுங்க வருமான அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (02) இலங்கை சுங்க வருமான அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீட்பு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது,
ஹஷிஷ் என்ற கஞ்சா
இத்தாலியில் இருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் பரிசுப்பொதி ஒன்றிலேயே இந்த ஹஷிஷ் என்ற கஞ்சா வகை காணப்பட்டுள்ளது.
இதனை சோதனை செய்ததன் மூலம் இது சுமார் 61 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா என தெரியவந்துள்ளது.
ஹோமாகமவில் உள்ள பெறுநருக்கு அனுப்பப்பட்ட பொதிகள் சேவையின் ஊடாக வந்த பரிசுப் பொதியை சீதுவயில் உள்ள தனியார் சரக்கு அகற்றும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
இங்கு சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது, உணவுப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட பரிசுப் பொதியில் நான்கு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா பொதிகளை அதிகாரிகள் மீட்கும் போது, அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்காக வந்த முகவர் ஒருவரம் சுங்க வருமான அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்களுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |