தெஹிவளையில் நடந்த துப்பாக்கிச் சூடு - சிக்கிய பயங்கர நபர்
தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜயவர்தனபுர காவல்துறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் அத்துருகிரிய, ஹபரக்கட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சந்தேபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஆவார்.
மேலதிக விசாரணை
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை காவல்துறை பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |