யாழில் டெங்கு பரவும் சூழல்: மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாணத்தில் (jaffna) டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது நேற்று (13.6.2024) வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் (Mallakam Magistrate Court) வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
இணுவில் (Iṇuvil) மற்றும் தாவடி பகுதிகளில் கடந்த 8 ஆம் திகதி இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனையின் போது, டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்ட இடங்கள் தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, மூவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்து மூவரையும் எச்சரித்த மன்று மூவருக்கும் 4 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 15 மணி நேரம் முன்