டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Hatton
By Sathangani May 23, 2026 08:00 AM GMT
Report

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன் டிக்கோயாவில் உள்ள ஒரு கடையில் வசித்து வந்த தம்பதியினர், கூர்மையான ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சந்தேகநபர் அடையாளம் 

அவர்கள் அணிந்திருந்த சுமார் 18 பவுண் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் காவல்துறையினர் தற்போது சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.

டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை | Dick Oya Double Murder Police Seek Public Help

விசாரணைகளின்படி, சந்தேகநபர் 21ஆம் திகதி காலையிலேயே டிக்கோயா நகருக்கு வந்துள்ளார். அங்குள்ள பல நகைக்கடைகளுக்குச் சென்று தங்க நெக்லஸ் ஒன்று வாங்கப் போவதாகக் கூறி, பல மணிநேரம் நகரைச் சுற்றித் திரிந்துள்ளார்.

பின்னர் அன்று மதியம் 1:15 மணியளவில் தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து பதுங்கியிருந்த அவர், கொலையைச் செய்துவிட்டு மாலை 5:30 மணியளவிலேயே கடையை விட்டு வெளியேறியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுமக்களிடம் உதவி கோரல்

இந்தக் கொடூரக் கொலையைச் செய்த சந்தேகநபரை விரைவில் கைது செய்வதற்காக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.

டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை | Dick Oya Double Murder Police Seek Public Help

எனவே, இந்த சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

  • ஹட்டன் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர - 071-8591114
  • ஹட்டன் தலைமையக காவல்துறை பிரதம ஆய்வாளர் - 071-8591117
  • ஹட்டன் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி - 071-8593163

தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015