பொருளாதார நிவாரண தாமதம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
வைத்தியர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்கு அதிகாரிகள் வழங்கிய தீர்வுகள் அறிவிக்கப்படாமை மற்றும் தொடர் நடவடிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (31) நாளை மறுதினமும், எந்த ஒரு தொழில் நடவடிக்கையிலும் ஈடுப்படாமல் இருப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிரலயில், சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வைக் கோரி அரசாங்கத்திடம் எட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நீதி
அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் இணைந்து முன்வைக்க இணக்கம் காணப்பட்ட வைத்தியர்களுக்கு உடனடி பொருளாதார நீதி வழங்கும் நோக்கில் குறிப்பிட்ட தீர்வுகள் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, தீர்வுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அங்கத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் அமைதியின்மை உணர்வுகள் குறித்து அதிபருக்கு எழுத்துமூல சமர்ப்பணத்தை சமர்பிக்க ஒன்றியத்தின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகவும் அதன் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரை அறிவிக்கப்பட்ட அரசியல் நோக்கங்களுடனான உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுதல் மற்றும் நடமாடும் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலகுதல் போன்ற தொழில்சார் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |