பேருந்து சாரதிக்கு திடீர் சுகயீனம் : வெல்லம்பிட்டியில் பாரிய விபத்து
இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேர்ந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இந்தப் பேருந்து, வெல்லம்பிட்டி அம்பகஹ சந்தி பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |