பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை; காவல்துறை அதிரடி சோதனை; 47 பேர் கைது!
இலங்கையில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்து வருகின்றது.
பாடசாலை மாணவ, மாணவிகளும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றதுடன், தொடர்ச்சியான கைதுகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளது.
அந்தவகையில் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்றாமை தொடர்பில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சோதனைகள் மற்றும் கைதுகள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்படடவர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லி கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய குறித்த கைதுகள் மற்றும் சோதனைகள் இடம்பெற்றுள்ளது.
அதேசமயம், குறித்த சோதனை நடவடிக்கைகளில், கஞ்சா வைத்திருந்த குற்றத்தில் மிரிஹான பகுதில் வைத்து பாடசாலை மாணவன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்படடமையும் குறிப்பிடத்தக்கது.