எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீடுகளை அதிகரிக்க OPEC+ நாடுகள் ஒப்புதல்
மத்திய கிழக்கு போர் தொடர்ந்து எரிசக்தி சந்தைகளைக் தாக்கி வருவதால், ஒபெக்+ எண்ணெய் கூட்டமைப்பின் எட்டு உறுப்பு நாடுகள், மே மாதம் முதல் தினசரி எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீட்டை 206,000 பீப்பாய்கள் (bpd) அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா, அத்துடன் ஈரானின் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளும் இந்தப் புதிய ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் தடைபட்ட விநியோகத்தில், ஒரு நாளைக்கு 206,000 பீப்பாய்கள் என்ற ஒதுக்கீட்டு அதிகரிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவானது.
குறைவான பீப்பாய்கள்
எனினும், அந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டவுடன் உற்பத்தியை அதிகரிக்கத் தயாராக இருப்பதையே இது உணர்த்துகிறது என OPEC+ வட்டாரங்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் "உண்மையில் இது சந்தைக்கு மிகக் குறைவான பீப்பாய்களையே சேர்க்கிறது," என்று, ஒபெக்கின் முன்னாள் அதிகாரியும், புவிசார் அரசியல் பகுப்பாய்வுத் தலைவராகப் பணியாற்றுபவருமான ஜார்ஜ் லியோன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |