இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்திந்த தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் (Julie Chung) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருக்கடி
மேலும், தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு அரசியலமைப்பினூடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ப் பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்வர் பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர்கள், ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலரும் கடந்த சில நாட்களாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Appreciated meeting with the Election Commission to hear about plans for elections and upholding a transparent process. As Sri Lanka, the U.S., and many countries face elections this year, we exchanged views on the importance of voting in free and fair elections as a pillar of… pic.twitter.com/M3k7KdqFmq
— Ambassador Julie Chung (@USAmbSL) May 28, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |