பாடசாலை அதிபரின் போதைப்பொருள் வலையமைப்பு :விசாரணையில் வெளியான தகவல்
1 கிலோகிராம் 185 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட எப்பாவல பாடசாலை அதிபரின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களும் தற்போது அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் விசாரணை
போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் அதிபரின் மனைவியான பேலியகொட நகராட்சி சபை ஊறுப்பினரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. பேலியகொட நகராட்சி சபை உறுப்பினர் தனது கணவர், அதிபரின் போதைப்பொருள் கடத்தல் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
துபாயிலிருந்து வந்த போதைப்பொருள்
துபாயில் சஷி அனுப்பிய போதைப்பொருட்களை அதிபர் மற்றும் அவரது குழுவினர் விற்பனை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துபாயில் இருக்கும் சஷி, "கொஸ்கொட சுஜி" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தியவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அதிபர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரது மனைவி பேலியகொட நகராட்சி உறுப்பினர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |