25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா - உறவுகளிடையே பெரும் சோகம்
கனடா
கனடாவில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் பிரஜையான மொஹமட் மஹாபுஸ் அலாம் என்பரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு கனடாவில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்திருந்தார். அவரது அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட போதிலும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2015ம் ஆண்டில் அலாமின் மகன் கனடாவில் குடியேறினார். கனடாவில் நாடு கடத்தப்படுபவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
கனடாவில் வாழ்ந்த காலத்தில் 300000 டொலர்களுக்கு அலாம் வீடு ஒன்றையும் கொள்வனவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு கடத்தல்
நாடு கடத்தப்படுவதனை எதிர்த்து அலாம் பல தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் அந்த மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கடந்த 17ம் திகதி அலாம் நாடு கடத்தப்படவிருந்த போதிலும், கொவிட் தொற்று காரணமாக அவர் நாடு கடத்தப்படவில்லை.
இந்த நிலையில், அலாம் இந்த வாரம் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மகன், மருமகள், நான்கு பேரப்பிள்ளைகள் அனைவரையும் பிரிந்து அவர் பங்களாதேஷ் திரும்ப உள்ளது உறவினரியே துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.