கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு
சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு போலி அறிவிப்பு தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த போலி அறிவிப்பில், இந்த ஆண்டு விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்தைத் தாண்டி, கேள்விகள் தாயரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தீர்வாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 8 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A சித்திக்கான மதிப்பெண்
அத்தோடு, “A” சித்திக்கான மதிப்பெண் 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 65 புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்கள் எல்லோருக்கும் A சித்தி வழங்கப்படும் என்றும் அந்த போலி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கண்ட அறிவிப்பு போலியாக தயாரிக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் மட்டுமே பரப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேண்டுகோள்
இதேவேளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சசு அல்லது பரீட்சைகள் திணைக்களம் சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் இணைய வலைத்தளங்களுக்கு மட்டுமே செய்தி வெளியீடுகளை வெளியிடுவதாக அறிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற ஒவ்வொரு அறிவிப்பும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பிலோ அல்லது இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் கடிதத் தலைப்பிலோ, சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையொப்பத்துடன், முறையாகப் பரிசீலிக்கப்பட்ட பிறகு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, இதுபோன்ற போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்ளப்படுவதாக என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்