கிழக்கு பல்கலையில் பெரும் மோசடி: மேலிடத்திலிருந்து சென்றுள்ள உத்தரவு
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த விடயத்தை பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர்கல்வி அமைச்சு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிய மாகாபொல புலமைப்பரிசில், விளையாட்டுத்துறை, ஆய்வு மகாநாடுகள், மற்றும் அபிவிருத்திகளில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
விசாரணை
இந்த முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி செயலகம் உயர்கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து இந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவிற்கு உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்கழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


