56 வருடங்களில் இடம்பெற்ற சாதனை
colombo
fish
record
sales
By Jaso
ஸ்ரீலங்காவில் ஒரே நாளில் அதிகளவான மீன் விற்பனை நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கடற்தொழிலாளர் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சராசரியாக நாளாந்தம் 14 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரையான மீன் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை கடற்தொழிலாளர் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஏப்ரல் 12 ஆம் திகதியான நேற்றைய தினம் 27 ஆயிரத்து 600 கிலோ கிராம் மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் 20 ஆயிரம் கிலோ கிராம் நிறையை தாண்டி இதுவரை மீன் விற்பனை செய்யப்படவில்லையென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை கடற்தொழிலாளர் கூட்டுத்தாபனம் கடந்த 56 வருடங்களில் நேற்றைய தினம் மாத்திரமே அதிகளவு மீன் விற்பனையை பதிவு செய்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்