யாழில் இடம்பெற்ற குழு மோதல்! ஐவர் படுகாயம் : ஒருவர் அதிரடி கைது
யாழ்ப்பாணம் - சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற இந்த குழு மோதலில் காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது.
ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த நிலையில் ஒரு குழுவினைச் சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

மோதலில் ஈடுபட்ட குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |