செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு: வெளியான அறிவிப்பு
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிக்குத் தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழிப் பகுதியை நேற்றைய தினம் (19-06-2026) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் புதைகுழி தொடர்பிலான நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஆதரவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு செய்யும்.
கடந்த கால அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியது போன்று எங்களுடைய அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டாது.

எங்கள் அரசாங்கத்தைத் தமிழ் மக்கள் முழுமையாக நம்பலாம்.
வடக்கு தெற்கு என்ற பாகுபாடின்றி குற்றம் செய்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்.
அதற்காக விசாரணைகளின்றி எவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது.
இராணுவத்தினர், படுகொலைகளில் ஈடுபட்டிருந்தால் அதற்கான ஆதாரங்களை முன்வைத்தால் நிச்சயமாக நாம் இராணுவத்தினருக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா எம்.பி மீது நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |