கிளிநொச்சியில் யானை தாக்கி கிராம உத்தியோகத்தரும் அவரது மனைவியும் பலி
death
elephant attack
kilinochchp
By Shalini
கிளிநொச்சி – பூநகரி, ஜெயபுரம் பகுதியில் நேற்று இரவு கிராம உத்தியோகத்தரும் அவரது மனைவியும் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்..
யாழ். சாவகச்சேரியிலிருந்து பூநகரியிலுள்ள தமது விட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே நேற்றிரவு இவர்களை யானை தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பூநகரியை சேர்ந்த 48 வயதான பாலசிங்கம் நகுலேஸ்வரன் எனும் கிராம உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது, கடும் காயங்களுக்கு உள்ளான அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில், சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்