மணற்காடு சவுக்கங்காட்டில் தொடரும் தீ : உலங்குவானூர்தி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை!

Jaffna Fire Ramalingam Chandrasekar
By Theepan Aug 29, 2026 11:27 AM GMT
Report

யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது.

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு

இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் : அரச தரப்பின் அறிவிப்பு

தேவையான நடவடிக்கைகள்

தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மணற்காடு சவுக்கங்காட்டில் தொடரும் தீ : உலங்குவானூர்தி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை! | Helicopter Operation To Control Fire In Forest

மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினதும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்

மன்னாரில் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் : எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : தமிழரசுக் கட்சியின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026