கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு

Mullaitivu Sri Lanka
By Shalini Balachandran Feb 22, 2024 07:12 AM GMT
Report

புதிய இணைப்பு

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (22) கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது வருகின்ற மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவினால் இடைக்கால அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர்

குறித்த அறிக்கையில், அகழ்வு பணியினை திட்டமிட்டபடி நடாத்த நிதி கிடைக்கபெறவில்லையெனவும் இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு | Human Burial Case Investigation

இதனடிப்படையில் குறித்த வழக்கானது வருகின்ற மார்ச் மாதம் 4 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் காவல்துறை பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி.கே நிறஞ்சன் மற்றும் கணேஸ்வரன் ஆமலும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையானது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான குறித்த வழக்கே இன்றையதினம் (22) முன்னெடுக்கப்படவுள்ளது.

விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணமில்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புடின்

விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணமில்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புடின்


மனித புதைகுழி

குறித்த மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு | Human Burial Case Investigation

இந்நிலையில், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டு இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு


வழக்கு விசாரணை

இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிப்பது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் தனது அறிக்கையை நீதிமன்றுக்கு அனுப்பியுள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு | Human Burial Case Investigation

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம்(22) வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

துல்லியமாக தாக்கின ஏவுகணைகள் : ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு : சிதறி கிடக்கும் சடலங்கள்

துல்லியமாக தாக்கின ஏவுகணைகள் : ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு : சிதறி கிடக்கும் சடலங்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021