கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 31 வயதான இந்திய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், அவர் சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்