இலங்கையில் இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்று அதிகரிப்பு

Influenza Doctors Disease
By Sindu Oct 15, 2026 04:10 AM GMT
Report

இலங்கையில் சமீபத்திய வாரங்களில் இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் பிரதம தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணபெம கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

35% நோய்த்தொற்று அடையாளம்

கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதை கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்று அதிகரிப்பு | Influenza Epidemiologist Sri Lanka Health Disease

"கடந்த வாரம் வரை, பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 35% இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்றுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது பரவி வரும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு இன்ஃபுளுவென்ஸாவே காரணம் என்பதை இது காட்டுகிறது. 

இருப்பினும், இந்த நோய்தொற்று பொதுவாக சிகிச்சையின் மூலம் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தாமல் குணமாகிவிடும். எனவே, பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம்," என்று அவர் கூறினார்.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ளவர்களுக்கு இன்ஃபுளுவென்ஸா சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது!

இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது!

ஓய்வு அவசியம்

நோய்த்தொற்று உள்ள ஒருவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிப்படும் நீர்த்துளிகள் மூலமாகவும், அத்துடன் நேரடித் தொடர்பு மூலமாகவும் இன்ஃபுளுவென்ஸா பரவுகிறது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மேலும் விளக்கினார்.

இலங்கையில் இன்ஃபுளுவென்ஸா நோய்த்தொற்று அதிகரிப்பு | Influenza Epidemiologist Sri Lanka Health Disease

வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

தொற்று ஏற்பட்டிருக்கும்போது, சவர்க்காரம் போட்டு அடிக்கடி கைகளைக் கழுவுவதும், முகக்கவசம் அணிவதும் நோய்ப் பரவலைக் குறைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026