அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் இலக்கு எது தெரியுமா!
எதிர்வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு கிராமிய வாக்காளர்களை இலக்கு வைத்து அரசியல் கட்சிகள் இம்முறை களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி அண்மையில் அரசியலுக்கு வந்த திலித் ஜயவீரவின் மவ்பிம ஜனதா பெரமுண போன்ற கட்சிகளும் கிராமிய மக்களை இலக்கு வைத்தே தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக கிராமிய மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியல் கருத்துக்கள் என்பவற்றை கண்டறிவதற்கான ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்புகளை தற்போதைய நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுத்துள்ளன.
பௌத்த வாக்கு
மறுபுறத்தில் கிராமங்கள் தோறும் உள்ள விகாரைகளின் தேரர்கள் வழியாக சிங்கள பௌத்த வாக்குகளை மீண்டும் ஒன்று திரட்டும் நோக்கில் பொது ஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று களமிறங்கியுள்ளது.
எனினும் கிராமிய மக்களில் பெரும்பாலானவர்கள் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக நாமல் தரப்பினர் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர்.
அதே நேரம் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன கிராமிய மட்டத்தில் வலுவான ஆதரவுத் தளமொன்றைக் கட்டியெழுப்புவதில் படிப்படியாக வெற்றியடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |