கொவிட் தொற்று - கர்ப்பிணித் தாய்மார் தொடர்பில் வெளியான தகவல்
covid vaccine
pregnant
covid infection
By Sumithiran
கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு தடுப்பூசி வாரம் இன்று (24 ம் திகதி) தொடங்குகிறது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா, தாய்மார்கள் இந்த வாரம் கொவிட் தடுப்பூசியைப் பெற கிளினிக்குகளுக்குச் செல்ல முடியும் என்று கூறினார்.
இதுவரை, 27 கர்ப்பிணி தாய்மார்கள் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை சுமார் 850 என்று அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி