யாழில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126ஆக உயர்வு
corona
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் இன்று நண்பகல் உயிரிழந்தார்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி